Saturday, July 19, 2008

WORK MORE...


உழைப்பு

உலகில் உயரம் அடைந்தவர்கள்உழைப்பின் வரம் பெற்றவர்கள்......

உழைக்க விரும்பாத எவரும்என்றும் உயரம் அடைந்ததில்லை....

உழைக்க விரும்பிய எவரும்என்றும் துயரம் அடைந்ததில்லை.......

உழைப்பையே உரமாக்கிமுயற்சி விதைகளை புவியில் தூவுங்கள்.........

விதைகளாய் உங்களை ஊன்றிவிருட்சாமாய் வான் நோக்கிஉயருங்கள்..........

இமயமே இலக்காய் விடியலே நோக்காய் எழுந்து நின்று போராடுங்கள்........

என்றும் இமயம் என்பது சரிவுகளுக்கு அப்பால் தான்.

விடியல் என்பது இரவுகளுக்கு அப்பால்தான்..............

GOOD THINKING.......

1. முயற்சிகள் தவறலாம், முயற்சிக்க தவறலாமா?.

2. விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை....

3. உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.

—கார்ல் மார்க்ஸ்.

4. எண்ணித் துணிக கருமம்

5. மனக்கட்டுப்பாடு கொண்டவர்களால் மட்டுமே எதிலும் வெற்றி பெற
இயலும்!

6. வேலைகாரனாக இருக்க தயாராக இரு! எஜமானாவாய் !!! ~

சுவாமி விவேகானந்தர்

7. முடியாது என்பது முட்டாள்களின் தத்துவம்.

8. அறிவாளிகள் சிறந்த எண்ணங்களை விவாதிக்கின்றனர், நடுத்தரமானோர்
நிகழ்ச்சிகளை விவாதிக்கின்றனர், சாதாரணமானோர் மக்களை
விவாதிக்கின்றனர்

9. தன் குறைகளைத் தெரியாதிருப்பதே மிகப் பெரிய குறை.-கார்லைல்

10. நீ என்ன நினைக்கிறாயோ அவ்வாறே மாறி விடுகிறாய்!

11. தண்ணீரையும் சல்லடையால் அளக்கலாம்பனிகட்டியாகும் வரை
காத்திருந்தால்!

12. நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும்.
—இங்கர்சால்.

13. தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல். —கன்பூஷியஸ்.

14. வெற்றிக்கான தாரக மந்திரம் என்ன ???சரியான முடிவுகள் .........

சரியான முடிவுகள் எப்படி எடுக்கப்படுகிறது ?

அனுபவத்தில் இருந்து....அனுபவம் எப்படி கிடைக்கிறது.?

தவறான முடிவுகளில் இருந்து.....

15. உன் மன நிம்மதியும் வருத்தமும் உன்னாலேயே!

Saturday, June 21, 2008

நான் சரித்திர நாயகன் அல்ல
நானே சரித்திரம்.

””வெற்றி எனது பிறப்புரிமை
ஆனந்தம் எனது காப்புரிமை””
அசாத்தியத்தை செய்ய நினைக்கும் சாதாரணன்”

தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்...
நல்லதோர் வீணை செய்தே -- அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி -- எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ, -- இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி! -- நில
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ..
விசையுறு பந்தினைப் போல் -- உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கெட்டேன் -- நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்க்கேட்டேன்
தசையினை தீசுடினும் சிவ
சக்தியை பாடும்நல் அகங்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன்;இவை
அருள்வதில் உனக்கேதுந் தடையுளதோ?
...பாரதி...